Monday, April 13, 2009

சுவிஸ் பாங்கில் எழுபது லட்சம் கோடி கருப்பு பணம்







70 லட்சம் கோடி ரூபான்னா எவ்வளவு...?
அதெல்லாம் 1000 ரூபாய்க்கு மேலப்பா...!!! என்று காமெடி செய்யாமல்..
70 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்....??? என்று கணக்கு போடாமல்.. கொஞ்சம் சீரியஸ்-ஆ படிங்க நண்பர்களே...

ஆம், எழுபது லட்சம் கோடி இந்திய ரூபாய்கள் சுவிஸ் பாங்கில் அடைந்து கிடக்கிறது.இங்கு கணக்கு வைத்துள்ள 180 நாடுகளில் இந்தியாவின் தொகை தான் மிகப்பெரிய தொகை.கருப்பு பணத்தில் இந்தியா தன் சாதனையை காட்டிஇருப்பது மிக தெளிவாக விளங்குகிறது.

இது தொடர்பாக ஜெர்மன் அரசு இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியது, அதாவது "இந்திய அரசு கேட்டுக்கொண்டால் சுவிஸ் பாங்கில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் அனைவரது முழு விவரங்களையும் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்" என்பதுதான்.

ஜெர்மன் அரசு எழுதிய இந்த கடிதத்தோடு 22-5-08 அன்று ஒரு செய்தியை வெளிஇட்டது Times of India நாளிதழ்.

1947 முதல் 2008 வரை இந்தியாவில் இருந்து பெரும் தொகை சுவிஸ் பாங்கில் சென்று தூங்கி கிடக்கிறது.ஜெர்மன் அரசு கடிதம் எழுதிய பிறகும் இந்திய அரசு எந்த ஒரு அதிகாரபூர்வமான விசாரணையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வெட்க கேடான ஒரு செய்தி(?) ஏனென்றால் இதில் பெரும்பான்மையான முதலைகள் அரசியல்வாதிகள்....(அப்புறம் எப்படி?).இந்த முதலைகள் விழுங்கும் அனைத்து பணமும் மக்களாகிய நமது உதிரம்.

இந்த பெரும் தொகையின் வைத்து கொண்டு இப்பொழுது இருக்கும் நமது வெளி நாட்டு கடனைபோல் 13 மடங்கு கடன்களை அடைக்கலாம்.வருடத்திற்கு ஒரு முறை budget என்று எதுவும் போட வேண்டாம், இந்த பணத்தில் இருந்து வரும் வட்டியே போதும்,மக்கள் வரி என்று எதுவும் கட்ட வேண்டியதில்லை, மாறாக ஒரு குடும்பத்திற்கு 1 லட்சம் வீதம் சுமார் 45 கோடி ஏழை குடும்பங்களுக்கு கொடுக்கலாம்.

சிறிது யோசித்து பாருங்கள் சுவிஸ் பாங்கில் மட்டுமே 70 லட்சம் கோடி இருந்தால், மீதமுள்ள 69 பாங்குகளில் (உலகில் மொத்தம் 70 பாங்குகளில் இது போன்ற வசதி உள்ளது) எவ்வளவு தொகை இருக்கும்?.

எத்தனை இந்தியர்களின் பணத்தை அபகரித்து இருப்பார்கள்?.

இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர் மட்டும் இறந்து விட்டால் அந்த முழு தொகையும் என்ன ஆகும்?. சந்தேகமே வேண்டாம் அனைத்தும் அந்த வங்கிக்கே உரிமை ஆகிவிடும்(!).

இந்த பண முதலைகளுக்கு *கர்மா* என்றால் என்னவென்று தெரியாதோ? இப்படி ஊழலினால் வரும் செல்வத்தை வைத்து அவர்கள் எப்படி கூச்சம் இல்லாமல் வாழ முடிகிறதோ?

இந்த பணம் அனைத்தும் நமது வியர்வை....!!, நமது உழைப்பு...!!,நமது உதிரம்..!!
சிந்தியுங்கள் இவை அனைத்தும் எங்கு இருக்க வேண்டியவை ? நம்மிடமா..?? அல்லது சுவிஸ் வங்கியிலா ..???.

6 comments:

  1. உங்க amount swiz-ல எவ்வளவு இருக்கு JK ?

    ReplyDelete
  2. உள்ளூர் பேங்க்-ல போடவே வழி இல்ல இதுலே சுவிஸ் பேங்க்-ல எங்க போடுறது...!!!
    நேர்மையான வழியிலே சம்பாதிச்ச சுவிஸ் பேங்க் போக வேண்டிய அவசியமே இல்லியே...!!!

    ReplyDelete
  3. ஊர்ல பல பேர் இப்புடி தான் சொல்லிட்டு இருக்காங்க!!!!

    ReplyDelete
  4. ஆனா நாங்க அப்டி இல்லிங்கோ..

    ReplyDelete
  5. //இந்த பணம் அனைத்தும் நமது வியர்வை....!!, நமது உழைப்பு...!!,நமது உதிரம்..!!
    சிந்தியுங்கள் இவை அனைத்தும் எங்கு இருக்க வேண்டியவை ? நம்மிடமா..?? அல்லது சுவிஸ் வங்கியிலா ..???.//

    என்ன தேர்தல்ல நிக்குறதுக்கு தயாராகுற மாதிரி இருக்கு! ;-)

    ReplyDelete
  6. Boss நீங்க எனக்கு ஆதரவு கொடுக்க தயார்னா நானும் தேர்தல்ல நிக்குறதுக்கு தயார்தான்...

    ReplyDelete